காதல் வழியும் கோப்பை

காதல் வழியும் கோப்பை, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், விலை 120ரூ. அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காவும், உருவாக்கிகொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரஸ்யத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, யுவகிருஷ்ணா, சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. சில நடிகைகளின் சொந்த வாழ்க்கை அவர்கள் நடித்த படங்களைவிட வியப்பும், திகைப்பும் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக, “சிவந்த மண்” காஞ்சனா, பல படங்களில் நடித்து சிறைய சம்பாதித்தார். அதையெல்லாம் அவருடைய அப்பாவே அபகரித்துக்கொண்டார். சட்டத்தின் துணையுடன் போராடி, ரூ.15கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டார். அதை அப்படியே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு, பெங்களூரு புறநகரில் சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கன்னட திரை உலகின் கனவு கன்னியாகத் திகழ்ந்த கல்பனா, யாரும் எதிர்பாராத விதமாக […]

Read more

சரோஜாதேவி

சரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு […]

Read more