ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும்

ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும், தொகுப்பாசிரியர்: இளசை மணியன், வேலா வெளியீட்டகம்,பக்.128, விலை ரூ.100. மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி என்று பாரதியார் பாடிய ருஷ்யப் புரட்சிக்கும் இந்தியாவுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சோவியத் நாடு, இஸ்கஸ், குடியரசு, ஜனசக்தி- நவம்பர் புரட்சி மலர் ஆகியவற்றில் இந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பாலதண்டாயுதம், ஆர். நல்லகண்ணு, சி.எஸ்.சுப்ரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு, தொ.மு.சி.ரகுநாதன் மற்றும் பல ருஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. […]

Read more