நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 220ரூ. தமிழ்த் திரையுலகில், சாதனை படைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி. திருலோகசந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இயக்கிய படங்கள் 65. அதில் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் 25. “ஏவி.எம்.” பட நிறுவனத்தை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் “அன்பே வா”. அதை இயக்கியவர் திருலோகசந்தர். இவர் தயாரித்த “பத்ரகாளி” படத்தின் கதாநாயகி ராணி சந்திரா, படம் முடிவடைவதற்கு முன் விமான விபத்தில் இறந்து போனார். படத்தைக் கைவிட்டால், பல லட்சங்கள் நஷ்டம் […]

Read more

கொண்டாடத்தான் வாழ்க்கை

கொண்டாடத்தான் வாழ்க்கை,  அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. மனித பிறவி எவ்வளவு இனிமையானது. அதை எப்படி கொண்டாடினால் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் 34 அத்தியாயங்களில் தொகுத்து அளித்துள்ளார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பளிச் பளிச் என்று சொல்லப்படும் குட்டிக் கதைகள் நூலை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. நகைச்சுவையையும் ஒரு படிப்பினையையும் இணைத்தே சொல்லப்படும் அந்தக் கதைகள் தனி விறுவிறுப்பைத் தருகின்றன. படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் ஜனரஞ்சக நடையில் எல்லோரது மனதைத் […]

Read more

புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, சாய்சூர்யா, 204/43, டி7, பார்சன் குருபிரசாத் ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 450ரூ. இது புதுவிதமான நாவல். 1947 ஆண்டு 15ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்குமுன், 1922 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்த கல்யாணம், பின்னர் மகாத்மா காந்தியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்த சத்யா இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம். பொதுவாக சரித்திரக் கதை என்றால், சரித்திரம் குறைவாகவும், கற்பனை அதிகமாகவும் இருக்கும். இதில் கற்பனை குறைவாகவும், […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

காலம்

காலம் சிறுகதைகள், தேவ விரதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 120ரூ. பிரபல வார இதழ்களில் வெளியான, பரிசும், பாராட்டுக்களும் பெற்ற ஆசிரியரின் 28 சிறுகதைகளின் தொகுப்பு. தினமலர் வாரமலரில் இவர் எழுதிப் பிரசுரமாகிய கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலின் மற்றொரு சிறப்பு, சிறுகதைக்கு ஆரம்ப வரிகள் கிமவும் முக்கியம் என அன்பர்கள் சொல்வதுண்டு. இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் கடைசி நான்கு வரிகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல சிறுகதைகளின் தொகுப்பு. […]

Read more

வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, முனைவர் சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 503, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-311-3.html அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம். முருகனை மணந்த வள்ளியின் விரிவான வரலாற்றை, இந்நூல் வாசிக்கிறது. இது குலசேகர பாண்டியனின் இறுதிக் கோட்டை நகரம். இங்கு நடந்த கன்னடப் போர் மிக முக்கியமானது. அகத்தியர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழால் போற்றப்பட்ட ஊர். […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33,  முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ). தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, […]

Read more
1 2 3