வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ. தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், தர்மராஜ் ஜோசப், யுவன் பப்ளிஷர்ஸ், 266 அம்மன் கோவில்பட்டி தென்பாகத்தெரு, சிவகாசி – 626 123, விலை 100ரூ. சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், முதியோர் குரல், இலவசம் ஏற்கலாமா? ஊழல் என்றால் என்ன? திருமண முறிவுகள் போன்ற 32 கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குவதுடன் அதற்கு பொருள் இருப்பதாக கருதினால் மூடநம்பிக்கை என்றும் கூறுகிறார் நூலாசிரியர். ஆங்கில மோகத்தால் தமிழ் சொற்கள் அழிவதை சுட்டிக்காட்டுவதுடன் தமிழ் மொழி, இனம் வளர எங்கும் தமிழை […]

Read more