குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார், பக். 352, விலை 275ரூ. குந்தியின் தந்தை பெயர் சூரசேனன், சகோதரன் வசுதேவன். கிருஷ்ணனும், பலராமனும் அண்ணன் மகன்கள். குந்தியின் தந்தை சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்ததால், இவள் குந்தி எனப் பெயர் பெற்றாள். பிறந்தது ஓர் இடம்; வளர்ந்தது வேறிடம். இல்லற வாழ்க்கையில் ஈடுபட இயலாத பாண்டுவை கணவனாகக் கொண்டாள். அரண்மனை வாழ்க்கையாவது கிடைக்குமா என்றால், அதுவும் கிடைக்கவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான் பாண்டு. மந்திரத்தின் உதவியால் […]

Read more

குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ. தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018

Read more

பீஷ்மரின் தேசம்

பீஷ்மரின் தேசம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கங்கையின் மைந்தராக பிறந்து, பிரம்மச்சாரியாக வளர்ந்து, தன் சகோதரர்களுக்கும், தந்தைக்கும் உறுதுணையாக இருந்தவர் பீஷ்மர். அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை, அரணாக இருந்து, நான்கு தலைமுறையை வழிநடத்திய பீஷ்மரின் வரலாற்றை, இந்நூல் விரிவாக விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

சகுனி

சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ. மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் […]

Read more