குதிப்பி

குதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/- அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும். சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. […]

Read more

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ. ‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை […]

Read more