மூலிகைக் காற்று வீசட்டும்
மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]
Read more