மாடர்ன் சவுத் இந்தியா

மாடர்ன் சவுத் இந்தியா, ராஜ்மோகன் காந்தி, அலெப் புக் கம்பெனி, விலை: ரூ.799 பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 2018 வரையிலான காலகட்டத்தின் தென்னிந்திய வரலாற்றைச் சுருங்கக் கூறும் முயற்சியாக ராஜ்மோகன் காந்தியின் இந்நூல் அமைகிறது. 16-ம் நூற்றாண்டில் தக்காணப் பீடபூமியின் பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிடார் சுல்தான்கள் ஒன்றிணைந்து, மத்திய காலப் பகுதியின் மிகப் பெரும் அரசான விஜயநகர ஆட்சிக்கு முடிவுகட்டினர். அதைத் தொடர்ந்து வலுகுன்றிய நாயக்கர்கள், சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இவர்களின் பரஸ்பரப் பகைமையை ஐரோப்பிய வர்த்தக கம்பெனிகள் […]

Read more

வாக்கிங் த ரோட்லெஸ் ரோட் எக்ஸ்ப்ளோரிங் தி ட்ரைப்ஸ் ஆஃப் நாகாலாந்த்

வாக்கிங் த ரோட்லெஸ் ரோட் எக்ஸ்ப்ளோரிங் தி ட்ரைப்ஸ் ஆஃப் நாகாலாந்த், ஈஸ்தரீன் கைர், அலெப் புக் கம்பெனி, விலை 699ரூ. நாகாக்கள் கடந்து வந்த பாதை மங்கோலியாவிலிருந்து சீனா, பர்மா வழியாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்குக் குடிபெயர்ந்த நாகா இன மக்களின் வரலாற்றைப் பேசும் புத்தகம் இது. கிராமங்களில் வழங்கும் எழுதப்படாத வரலாற்றுத் தொன்மங்கள், நாகா இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் சம்பவங்கள் ஆகியவற்றைத் தொகுத்த வகையில், நாகா இன மக்கள் கடந்துவந்த பாதையை எடுத்துரைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது. அவர்கள் இந்தியாவை வந்தடைந்த பிறகு […]

Read more