நெடுமரங்களாய் வாழ்தல்

நெடுமரங்களாய் வாழ்தல், ஆழியாள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.70. ஆறாத பெருவலி இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள். நன்றி: தமிழ் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. புலம்பெயர் வாழ்வியல் வலிகள் புலம்பெயர் இலக்கியங்களுள் பெண் படைப்புகளுள் தன்னை முனைப்புடன் பதிவு செய்துகொள்ளும் கவிதைகள். எவ்வளவு தவிர்த்தும் சில கவிதைகள் இனம் புரியாத ஒரு உந்துதலை, ஆர்மூடுகல் மனநிலையை மீண்டும் மீண்டும் என்னுள் ஏற்படுத்துகின்றன. அதனாலே அவை ஏதோ ஒரு உத்வேகத்தோடு சடுதியாக எழுத்தில் பதியப்படுகின்றன. சில கவிதைகள் பள்ளிக் குழந்தைகள் போன்று தொடர்ந்து பேசிக்கொண்டே வருவதால் ஒரு சிட்டுக்குருவி போலே தொடர்ந்து கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருப்பதால் அவை தரும் செல்லத் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. ‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார். ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள். பிறப்பின் பொருள் என்ன? […]

Read more