திருவாசகம் பதிக விளக்கம்

திருவாசகம் பதிக விளக்கம், ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. படிப்பவரது உள்ளத்தை உருக்கி ஒளி கூட்டும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாகம். அதன் பதிகங்களைக் கூறி, அதற்கு எளிய விளக்க உரையுடன் இந்நுால் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் யாவும் இறைவனது புகழை, பக்தியுணர்வை, தங்களது சிறுமையை, இறைவன் தங்களிடம் காட்டிய கருணையைக் கூறுவதைப் பார்க்கலாம், இந்நுால் எழுதிய மூவரும் பக்தி அனுபவத்தில் தேர்ந்தவர்கள் என்றாலும், அந்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. திருவாசகம் இதிலிருந்து வேறுபட்டு, தாம் பெற்ற பக்தி அனுபவத்தை நமக்குக் கூறுகிறது. […]

Read more

திருவாசகம்

திருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200; சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

ஞானாமிர்தம்

ஞானாமிர்தம், ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 650ரூ. திருவொற்றியூரில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர், சைவ சித்தாந்த கொள்கைகளை விளக்கி எழுதிய நூல் ஞானாமிர்தம். இதில் உள்ள 75 பாடல்களில் காணப்படும் கடினமான அத்தனை வார்த்தைகளுக்கும் எளிய பதவுரை, மற்றும் விளக்கவுரை, தொகுப்பு உரை ஆகியவற்றுடன் அந்தப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களை விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான ஆன்மா, இறைவன், பாசம் ஆகியவற்றை பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கமாகத் தந்து இருப்பது […]

Read more