கண்ணதாசன் 365

கண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

தென்றல் வளர்த்த தமிழ்

தென்றல் வளர்த்த தமிழ், கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய தென்றல் இதழில், அன்னைத் தமிழின் அருமை குறித்து அக்காலத் தமிழறிஞர்கள் பலரும் எழுதிய கட்டுரைகளை தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆர்.பி.சங்கரன். செந்தமிழ்க் கட்டுரைகள் செங்கரும்பாய் இனிக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி,

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி, மணிவாசகர் பதிப்பகம், விலை 90ரூ. கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுத, எம்.ஜி.ஆர். நடித்த காலக்கட்டம், தமிழ்த்திரை உலகில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். சிறந்த பாடல்கள் வரிசையாக வந்தன. அருமையான பாடல்கள் அணிவகுத்தன. கவிஞர் பொன்.செல்லமுத்து எழுதிய இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். படங்களில் கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல்கள் விவரம் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிய மற்ற கவிஞர்களின் விவரமும் உள்ளது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவரும் விரும்பி ரசிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more