உருள் பெருந்தேர்

உருள் பெருந்தேர், கலாப்ரியா, விகடன் பிரசுரம், பக். 262, விலை 130ரூ. படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் உணர்வது நமக்கு புது அனுபவத்தைக் கொடுக்கிறது. நூலாசிரியர் கலாப்ரியா தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் சுவாரஸ்யங்களையும் மிகவும் ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். தனது இளமைப் பருவத்தை வாசகர்களின் நெஞ்சில் பதிய வைத்துச் செல்லும் வரிகள் ஏராளம். தன் பதின் பருவத்தைச் சொல்லிச் செல்லும்போதுதான் வாழ்க்கை முறை குறித்தும், சமூகத்தின் வரலாறு குறித்தும் அழகாக எடுத்துரைத்துள்ளார். கலாப்ரியாவின் […]

Read more

காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]

Read more

காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட வியத்தகு அனுபவங்கள் வழியே தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய எண்ணப் பதிவுகளாக புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இக்கால இளைஞர்களும், அக்கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கின்றன. 1940களில் சங்கீத […]

Read more

சுவரொட்டி

சுவரொட்டி, கலாப்ரியா, கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41. வெளிப்படையான அனுபவங்களை எழுதுவது தங்களது பிம்பங்களை உடைத்துவிடும் என்பது அனேக தமிழ் எழுத்தாளர்களின் பயமாக இருக்கிறது. போலி முகமூடிகளின்றி நேர்பட பேசும் கலாப்ரியாவின் உரையாடல்களின் தொடர்ச்சிதான் அவரது கட்டுரைகள். கலாப்ரியாவின் நான்காவது கட்டுரைத் தொகுப்பான சுவரொட்டி வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவில் தொலைத்த தமிழர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. தீவிர சினிமா ரசிகர்களுக்கு தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுடனான உறவு பற்றி சொல்லும்போது, Murder She Said என்ற […]

Read more