கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

ஞானம் நுரைக்கும் போத்தல்

ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன், ஆதிரை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 60ரூ. பெருங்கதையைத் திறக்கிற சாவிகள் குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. பேய்கள் மிகவும் நேர்மையானவை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பது இன்னும் […]

Read more