பறையும் பாவையும்

பறையும் பாவையும், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.110. புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பினால், பாடல்களும், அதன் அர்த்தமும் வரிசையாக உள்ளன. ‘திருப்பாவைக்கு நிறைய புத்தகங்கள் அர்த்தத்துடன் வந்துவிட்டதே…’ என்ற எண்ணம் முதலில் எழத் தான் செய்கிறது. ‘இவ்வளவு தானா… விசேஷம் ஒன்றும் இல்லையே…’ என்ற எண்ணத்துடன், 43ம் பக்கத்தைத் திருப்பும்போது தான், ஆசிரியரின் சிறப்பம்சம் துவங்குகிறது. பாவை என்றால் என்ன, பாவை நோன்பு எங்கு தோன்றியது, ஆண்டாள் யார், பறைக்கு ஆண்டாள் ஏன் முக்கியத்துவம் கொடுத்தாள், கண்ணன் காலத்திலேயே இந்த நோன்பு இருந்ததற்கான ஆதாரம் என […]

Read more

மூளைக்குள் வாருங்கள்

மூளைக்குள் வாருங்கள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.212, விலை ரூ.220. புலன்களின் மூலமாக மூளைக்குள் செல்லும் தகவல்கள் எல்லாம் மூளையில் பதிய வைக்கப்படுவதில்லை. நிறைய தகவல்களை மூளை வீணடித்துவிடுகிறது. தகவல்களை சரி பார்க்காமலேயே சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தகவல்களை எடிட் செய்து தனக்குள் பதிந்து வைத்துக் கொள்கிறது. அவகாசம் கொடுத்தால் மூளை சரியாக தர்க்கம் செய்யும். அவசரப்படுத்தினால் மூளை குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கும். மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் – டெம்போரல் லோப் இரண்டும் சேர்ந்துதான் தற்காலிக நினைவுகளை வைத்திருக்கின்றன. இப்பகுதி சேதமடைந்தால் பார்த்தது, கேட்டது […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன. இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், […]

Read more

மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும், ஒன்றைத் திறந்து வைத்து மற்றொன்றைப் படித்தாலும், அச்சு பிசகாமல், அர்த்தம் மாறாமல், பிறவி குறித்தும், மனம் குறித்தும், ஆழ் மனம் குறித்தும் அழகாய் விளக்கி விடுவார். அறிவியல் மூலம் ஆன்மிகத்தைத் தேடி, ‘நான் யார்’ என்ற கேள்விக்கு, ‘இது தான்யா நீ…’ என்ற பதிலை அறிவுப்பூர்வமாய், அழகாக விளக்கிச் சொல்கிறார். மனம், ஆழ் மனம் ஆகியவற்றை அழகாக விளக்கி, […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன.இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், நகையில் […]

Read more

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ‘டெலஸ்கோப்’ பார்த்திருக்கீங்களா? ‘இல்லை… எனக்கு, ‘பைனாக்குலர்’ தான் தெரியும்… மொட்டை மாடியிலிருந்து, நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்டின் ஜன்னல் வழியே, உள்ளே உத்துப் பார்ப்பேன்…’ என, வாயிலிருக்கும் 32ம் தெரிய சிரிக்கிறீங்களா… நீங்களாக எழுதி வைத்துள்ள உங்கள் தலைச் சுழி அப்படி! அப்படி உத்துப் பார்த்து நீங்கள், ‘வாங்கி’க் கட்டிக் கொண்டால், அதுவும் உங்கள் தலைச் சுழியே!‘டெலஸ்கோப் வாங்கத் தோணவில்லை; பைனாக்குலர் வாங்கும் வரை தான் அறிவு இருக்கிறது’ என்பதெல்லாம், நீங்களாகவே, […]

Read more

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதை,  க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.350, விலை ரூ.400. அஷ்டாவக்ரர் என்கிற ஞானி ஒரு துறவி. மன்னர் ஜனகர் ஒரு கர்மயோகி. இருவரும் சந்தித்து தத்துவார்த்தமாக உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். இருபது அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலில் பதினொரு அத்தியாயங்கள் அஷ்டாவக்ரருடைய உபதேசமாகவும், ஒன்பது அத்தியாயங்கள் ஜனகர் தனது அனுபவங்களைக் கூறும்விதமாகவும் அமைந்துள்ளன. ஞானி என்பவன் யார் என்று கூறுமிடத்தில் அஷ்டாவக்ரர், ஞானி என்பவன் எந்த குலத்தையும் சேர்ந்தவன் அல்லன். அவன் வடிவம் உடம்பு அல்ல. அதனால் அவன் […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120 ஆன்மிகத்தை முன் வைத்து எழுதப்பட்டுள்ள நுால். ‘சைதன்யம்’ என்ற பொருள் பற்றி பேசுகிறது. அதாவது சுத்த தனிஅறிவு பற்றி அலசுகிறது. விழிப்பு நிலை தான் சைதன்யம். ஒருவனிடம், விழிப்பு நிலை எங்கே உள்ளது என்று கேட்கலாம். அதற்கு பதில் உண்டு. என்னை பார்க்கிறீர்கள்; நான் நீல வண்ணச் சட்டை அணிந்து உள்ளேன். எப்படி பார்க்க முடிகிறது. கண்ணால் பார்க்க முடிகிறது. கண்களின் பின் இருப்பது என்ன… நீங்கள் தான். அதுதான் ஆன்மா எனப்படுகிறது. கண்ணில் […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120. கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து…உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் […]

Read more