தங்கம் விலை தக்காளி விலை

தங்கம் விலை தக்காளி விலை, இராமன் முள்ளிப்பள்ளம், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.70. வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை அமல்படுத்தும் வகையில், கற்பனையில் நிவர்த்திக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவை, சமூகத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தும் வகையில் உள்ளன. தொகுப்பில் உள்ள முதல் கதை, அர்ச்சகர் பணி என்ற தலைப்பில் அமைந்தது. மிகவும் வித்தியாசமான கருவை அமைத்து எழுதியுள்ளார். வார்த்தைகளில் கடும் கோபம் தெறிக்கிறது. தொடர்ந்து புதிய யேசு, வெள்ளை நிறத்தொரு பூனை, சிதறு தேங்காய் […]

Read more

எல்லாம் மெய்

எல்லாம் மெய், எனது வாழ்க்கைப் பயணம், டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக்.528, விலை ரூ.450. டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் கொண்ட நூல்.நூலை வாசிக்கும்போது, நூலாசிரியர் பத்திரிகையாளரா, எழுத்தாளரா, மருத்துவரா, அரசியல்வாதியா? இவர் எதில் முதன்மை வகிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் எழுத்தும் பத்திரிகையும் இவரது நேசிப்புக்கு உரியவை என்று தெரிகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பயின்றபோதே தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி இருக்கிறார். “மாணவம்’ இதழுக்கு உதவி ஆசிரியராக, ஓவியராகப் பணி புரிந்திருக்கிறார். அரசியலைப் பொருத்தவரை, […]

Read more

சான்றோர்கள் வாழ்வில்

சான்றோர்கள் வாழ்வில், பாவலர் மலரடியான், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.60 அரசியல்வாதிகள், ஆன்மிக அறிஞர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய கருத்துக்கள் நிறைந்த நுால். காந்தி முதல் கண்ணதாசன் வரை, அறிஞர்களின் நகைச்சுவைகள் விரவிக் கிடக்கின்றன. நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் தாயிடம், உங்கள் மகன் நிலவில் கால் பதித்த நிகழ்ச்சி மகிழ்ச்சி தந்ததா என்று நிருபர் கேட்டார். தாயின் பதில் நெகிழ்ச்சி தருகிறது. உயர்ந்தது தாய் மனம். – சீத்தலைச் சாத்தன் நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நானும் என் தமிழ் எழுத்தும்

நானும் என் தமிழ் எழுத்தும், ஆசிரியர் தீபம் எஸ். திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 130ரூ. தமிழறிஞர்கள், இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள், கவிஞர்கள் போன்றவர்கள் தங்கள் எழுத்து அனுபவங்களை, தீபம் இலக்கிய மாத இதழில் பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்களின் 10-வது தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. வில்லிசை கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள், மகன் மற்றும் எழுத்தாளர்களான தமிழ் ஞான குரு, கவுதம நீலாம்பரன், கீரனூர் ராமமூர்த்தி உள்பட 26 பிரபலங்களின் எழுத்து அனுபவங்கள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more

காமராஜர் ஓர் மகாத்மா

காமராஜர் ஓர் மகாத்மா, டாக்டர் தேனி அ. ஈஸ்வரதாஸ், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 75ரூ. “படிக்காத மேதை” என்றும், “தமிழகக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர்” என்றும் போற்றப்படுபவர் காமராஜர். அவர் முதல் – அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் நடத்தி சாதனை புரிந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் தேனி அ.ஈஸ்வரதாஸ். காமராஜர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சட்டப் பேரவையில் எனது பணிகள்

சட்டப் பேரவையில் எனது பணிகள். டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக்.360, விலை ரூ.255. மருத்துவரான நூலாசிரியர், 1996-2001, 2006-2011 ஆகிய பத்தாண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அப்போது அவர் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து ஆற்றிய உரைகளும், அதற்கான பதில்களும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டு காலத்தில் பள்ளிப்பட்டு தொகுதியில் அவர் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சாதாரண மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகளை […]

Read more

சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்

  சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 225ரூ. 1996முதல் ஐந்தாண்டுகளும், 2006ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளும் தமிழக சட்டசபை காங்கிரஸ் உறுப்பினராகப் பணியாற்றியவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன். சட்டசபையில் அவர் ஆற்றிய பணியை புத்தகமாக எழுதியுள்ளார். சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், கலந்துகொண்ட விவாதங்கள், எழுப்பிய கேள்விகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள்

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள், தமிழில் கவுதம் சஞ்சய், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 178, விலை 110ரூ. பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இரக்க குணம் உள்ள ஒரு பெண்ணை சித்தரிக்கும் ஜான்ஸ்டீன் பெக்கின், ‘மலர்ச்செடி’ திகில் உணர்வை எழுப்பும், எட்கர் ஆலன் போவின், ‘மர்ம மாளிகையின் வீழ்ச்சி…’ ஒருவர், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், அங்கு ஆவிகள் உலவும் என்ற […]

Read more

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு)

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு), ஆரூர் ஆர்.சுப்பிரமணியன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 180ரூ. இந்து மதம் குறித்த ஆன்மிகம் தொடர்பாக அறுநூறு கேள்விகளுக்கு இந்த நூலில் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் பதில்களைத் தருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அவர் தீர்த்து வைக்கிறார். இந்துக்களின் பூஜை முறைகள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், கோவில்களின் கட்டமைப்பு, புராண, வரலாற்றுப் பின்னணிகள் என எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான விளக்கமான பதில்கள், நம்மை வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more
1 2