சுளுந்தீ

சுளுந்தீ, ரா.முத்துநாகு, ஆழி பதிப்பகம், பக். 472, விலை 450ரூ. பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர். ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம். தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, இரா.முத்துநாகு, ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.450 நெருப்பும், சக்கரமும் மனித குல நாகரிக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளிகள். நெருப்பைப் பூவுலகுக்குத் திருடிக்கொண்டு வந்துசேர்த்த பிரமிதியாக்கைக் கடவுளாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்டு, பிறகு ஒளிரும் மின்சாரமாகப் பரவிவிட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிக்கத்தக்க வஸ்து அல்ல. ஒருகாலத்தில் எண்ணெய்த் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்னரே ‘சுளுந்து’ என்ற மரம் வெளிச்சம் தந்துள்ளது. சுடரும் நெருப்பான சுளுந்தீயைக் கொண்டு […]

Read more