இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக்.160, விலை 80ரூ. இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும், கவிதைகளாக, காவியங்களாக வெளிவந்தன. அவை காலமாற்றத்தால், நவீன இலக்யி வெளிப்பாட்டால், கட்டுரைகளாக உருமாற்ற துவங்கின. இந்த ஆய்வு புத்தகத்தில் பெண்யிம், திருக்குறளில் கல்வி, சிலப்பதிகாரம் காட்டும் மானுட விழுமியங்கள் உள்ளிட்ட, பல ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more