குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள், ச. மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 80ரூ. ‘வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன’ என்று சொல்லும் பேராசிரியர் ச.மாடசாமி, மொழி, பண்பாடு, கல்வி சார்ந்து எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு. எதையும் மேம்போக்காக அணுகாமல், கூர்ந்து கவனித்து எழுதும் கட்டுரையாளரின் நுட்பமான பார்வைக்கு இந்நூலின் கட்டுரைகளே சாட்சி. ஆழமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள்கூடச் சட்டென முடிந்துவிடுகின்றன. வகுப்பறைக்குள்ளிருக்கும் அதிகாரம் பற்றிப் பேசும் கட்டுரையும், அகங்காரத் தமிழ் எனும் மொழியின் சமூகத் தேவை குறித்த அக்கறையுடன் கூடிய […]

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more