இரண்டு தந்தையர்கள்

இரண்டு தந்தையர்கள், சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம், பரிசல் வெளியீடு, விலை: ரூ.200. மறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று […]

Read more