திருக்குறள்

திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ. உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. […]

Read more

திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ. பொதுவாக பழமொழிகள் […]

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 3/643, குப்பம் சாலை, காவேரி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-0.html இந்நூலின் நாயகர், ஈ.வெ.ரா. பெரியாரின் அண்ணன் மகன். இவர் பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக்கூடியவராகவும் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் சில அரசியல் முடிவுகளில் முரண்பட்டு, அண்ணாதுரையுடன் இணைந்து தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக […]

Read more

போதி தருமர்

திருக்குறள், ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2-ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5; விலை ரூ. 295 திருக்குறள் மூலமும் விளக்க உரையும் புத்தகத்தை மூத்த தமிழறிஞர் நன்னன் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்ட உரைகள் வந்திருந்தாலும் புலவர் நன்னனைப் போல எளிய முறையில் கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு குறளைச் சொல்லி அதற்கான உரைநடை, சொற்பொருள், விளக்கம், கருத்துரை என்று மிக எளிய முறையில் விளக்கி இருக்கிறார் நன்னன். 90 வயதைத் தொட்ட புலவர் மா.நன்னன் கடலூர் […]

Read more

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ. பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் […]

Read more