தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் […]

Read more

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 65ரூ. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது. கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முகமென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி  நிரல் குறிகளைப் […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி?

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு டல்லாஸ் நகரில் காரில் ஊர்வலமாக சென்றபோது எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்? அவரை சுட்டதாக கைது ஆன ஆஸ்வால்டு என்பவனை ஜேக் ரூபி என்பவன் சுட்டுக்கொன்ற மர்மம் என்ன? என்பது பற்றியும், மற்றும்  இது தொடர்பான அனைத்து தகவல்களும் துப்பறியும் நாவல்போல சுவைபட தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கென்னடி கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உண்மையில் சுட்டுக்கொன்றது […]

Read more

அழகைத் தேடி

அழகைத் தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. பெண்கள் காதல் என்னும் பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை நாளிதழ்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகள் எடுத்துரைக்கின்றன. இக்கருவை மையமாக வைத்து எழுத்துலகில் தனிச்சிறப்பிடம் பெற்றுள்ள ஜோதிர்லதா கிரிஜா இச்சமூகப் புதினத்தை எழுதியுள்ளார். சூர்யா என்கிற இளம்பெண் முன்பே திருமணமான ஒருவன் சாமர்த்தியமாக அதை மறைத்துக் கூறும் பொய்யை நம்பி, எப்படிக் காதல் வலையில் விழுந்து ஏமாந்து […]

Read more

சமயம் கடந்த வாழ்க்கை

சமயம் கடந்த வாழ்க்கை, வீ.ப. சதாசிவம், தி.சென்டர் பார் ரிசர்ச் இன் செக்குலர் தாட்ஸ் அண்ட் ஐடியாஸ், ஆர் 70, கோவைபுதூர், கோவை 641042, விலை 100ரூ. அறிவுலகத்தில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று மதச்சார்பின்மை. இது நமது அரசியலமைப்புச் சட்டநூலின் முதுகெலும்பாக உள்ளது. இதன் அடிப்படையில் சமயம் கடந்த வாழ்க்கை என்ற தலைப்பில் ஆசிரியர் வீ.ப. சதாசிவம் எழுதியுள்ள புத்தகம் இது. நவீன வாழ்க்கையில் மதம் என்பதின் தேவை அற்றுவிட்டது என்பதைத் தனது தர்க்கங்கள் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர்.   —-   […]

Read more