ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more