மரக்குட்டி

மரக்குட்டி, கி.ரவிக்குமார், பாவைமதி வெளியீடு, விலைரூ.90 வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில் வடித்துள்ளார்.கதாபாத்திரங்களுடன், மரம், பறவைகள் குறித்தும் எழுதியுள்ளார். வியக்கும் வகையில் ஒப்பீடுகள் உள்ளன. கதைகளில் சமூக சிந்தனை பரவலாக உள்ளது. நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

யாளி

யாளி, ச.வைரவ ராஜன், பாவைமதி வெளியீடு, விலை 180ரூ. வித்தியாசமான கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஏராளமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகக் கோவில்களில் மட்டுமே காணப்படும் சிற்பங்களான யாளி என்ற மிருகம் இருந்தது உண்மையான என்ற ஆய்வு பல இலக்கியங்களின் மேற்கோள்கள் வழியாகக் கொடுக்கப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. மேலும் யானை, காகம், நாய், பேய் போன்றவைகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் தந்து இருப்பது சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கு வண்ணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற தகவலும் வியக்க வைக்கிறது. […]

Read more

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா, பெருமாள் நல்லமுத்து, பாவைமதி வெளியீடு, பக். 96, விலை 75ரூ. முதல் கதையில் ஆரம்பமான வேகத்தை கடைசி கதை வரை கொண்டு சென்றிருப்பது இன்னும் சுவாரசியம். ‘வாழ்க்கை, துாய்மை, ஓடுகாலி, பிச்சைக்காரி’ உள்ளிட்ட கதைகள், ஒவ்வொரு விதமாய் நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ‘ஜனனமும் மரணமும்’ கதை நெஞ்சை வருடுகிறது என்றால், ‘மனைவி’ கதையானது முகத்தில் அறைகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருப்பது, நுாலாசிரியரின் திறமையைக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more