வழிநெடுக வைரங்கள்

வழிநெடுக வைரங்கள், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,விகடன் பிரசுரம், பக்.240, விலை ரூ.210. சங்க கால நூல்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில்- இக்கட்டான சூழ்நிலைகளில் – கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது. அவற்றை இந்நூல் விளக்குகிறது. மனித வாழ்க்கையில், பின்பற்ற வேண்டிய நெறிகள் நிறைய உள்ளன. ஆனால், கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகியவை இல்லாத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய சங்க கால இலக்கியங்களில் வள்ளுவரும், ஒளவையாரும் கொடுத்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் என நம் சான்றோர்கள் விட்டுச் […]

Read more

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, இந்து தமிழ் திசை, விலை 90ரூ. புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும் புதிய கல்விக் கொள்கை இன்றைய நாளின் மிக முக்கியமான விவாதமாகியிருக்கிறது. இது எதிர்காலச் சமூகத்தை நிர்ணயிக்கக் கூடியது என்ற வகையில் ஆழஅகலத் தெரிந்துகொள்வதும் ஆக்கபூர்வமாக உரையாடுவதும் அவசியமானது. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் புத்தகம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோது எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதனால்தான் […]

Read more

நாட்டுக்கொரு பாட்டு

நாட்டுக்கொரு பாட்டு, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தி இந்து தமிழ், விலை 170ரூ. உலக நாடுகளின் தேசிய கீதம் உருவான விதம் பற்றி தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் இணைப்பிதழில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 43 பிரபல நாடுகளின் தேசிய கீதம் குறித்து பலரும் அறிந்திராத விஷயங்கள் சுவைபட திரட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு வித தகவல்களை நூலாசிரியர் பதிந்திருப்பதும், பாடலை தமிழாக்கம் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம். குறிப்பாக பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் […]

Read more

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல  வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,  விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65. அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. […]

Read more