தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, சென்னை, விலை 80ரூ. சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை விளக்கும் நூல். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் என ஆழமாகப் பேசுகிறது நூல். சமையலறையின் அமைப்பிலிருந்து வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வழிகள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- போர்ப் பறவைகள், வி.டில்லி பாபு, மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் […]

Read more

மனிதன் தேவர் நரகர்

மனிதன் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 180ரூ. இன்றைக்கு யார் யாரை எல்லாமே பூனை நடையைப் பார்த்துவிட்டு உலக அழகி என்று மகுடம் சூட்டுகிறார்கள். தமிழ்த்திரை உலகில் நிஜமாகவே அப்படி ஒருவர் இருந்தார். உணவு, நீர் இரண்டும் அருந்தாமல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பசியும் தாகமும் இன்றி ராஜகுமாரியை ஒரு ரசிகர் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை பெரிய பிரபஞ்ச அழகி அவர்…‘ என்று எழுதுகிறார் பிரபஞ்சன். பி.யு. சின்னப்பா நடித்த கிருஷ்ணபக்தி டிவிடியைப் பார்த்துவிட்டே இந்த விமர்சனம். அந்த சின்னப்பாவுக்கு […]

Read more

நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை 100ரூ. ஜாம்பஜார் ஜக்கு சிரிப்பு மருந்து, தினமும் இரண்டு வேளைகள் என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான வைத்தியங்கள். போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். சிரிப்பு வைத்திய நிபுணர் பாக்கியம் ராமசாமியின் நானா போனதும் தானா வந்ததும், நூலுக்குத்தான். பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான் என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா? கட்டுரை ஒன்றே நிரூபித்து விடுகிறது. தாத்தா தம்முடைய […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே, மாலன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 160ரூ,‘ ஒன்றுமட்டும் சொல்வேன், ஜென்னி உன்னைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்- இப்படி மகன் காரல் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடை யதந்தை, அப்பாவிடம் பெரிதும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த மார்க்ஸ், அறுபத்தைந்து வயதில் மரணமடையும்வரை தம் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருந்தது அவருடைய படத்தைத்தான். கஸ்தூரிபாவின் கடைசி நிமிடங்கள் […]

Read more

எப்படி ஜெயித்தார்கள்?

எப்படி ஜெயித்தார்கள்? ரமணன், புதிய தலைமுறை வெளியீடு, 25 ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 32, விலை 100 ரூ. தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை தம்பட்டக் கதைகளாகத் தராமல் வியூகங்களாக விரிக்கிறது நூல். தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில்முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், […]

Read more