ஈரோடு மாவட்ட வரலாறு

ஈரோடு மாவட்ட வரலாறு, புலவர் செ. இராசு, வேலா வெளியீட்டகம், பக். 254, விலை 200ரூ. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட நிலைக்கு உயர்ந்தது. தமிழகத்தின் சிறு பிரிவுகளில் ஒன்றாக விளங்கியது கொங்கு நாடு. இந்த கொங்கு நாட்டை நான்கு திசைகளின் அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தனர். அவற்றில் தெற்குக் கொங்குப் பகுதியையும் வடக்குக் கொங்குப் பகுதியையும் உள்ளடக்கியது இந்த ஈரோடு மாவட்டம். பெருங்கற்காலம் துவங்கி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குக் கொடுமணல் […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு,புலவர் செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

கி.பி.1800இல் கொங்குநாடு

கி.பி.1800இல் கொங்குநாடு, புலவர் செ. இராசு, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், சேலம், பக். 352, விலை 195ரூ. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி ஆட்சி நிலவிய காலத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், மைசூர் ப.கதிகள் எப்படி இருந்தன என்பதை பிரான்சிஸ் புக்கானன் என்பவர் அளித்த நிலைக் குறிப்புகள் வழியாக விளக்குகின்றனர் நூலாசிரியர்கள். டாக்டர் புக்கானன் சென்னையிலிருந்து கோவை வரையிலும், மைசூரிலிருந்து கரூர் வரையிலும் குறுக்கும் நெடுக்குமாக மேற்கொண்ட கள ஆய்வில் நேரடியாகக் கண்ட தகவல்களின் பதிவு மட்டுமின்றி, அந்த இடத்தின் அதற்கு […]

Read more