வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more

சாதி அடையாள சினிமா

சாதி அடையாள சினிமா, தொகுப்பாசிரியர் நீலன், பேசாமொழி வெளியீடு, விலை 220ரூ. தமிழில் வெளிவந்த, சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, நாட்டாமை, தேவர் மகன் உள்ளிட்ட, சாதி அடையாள சினிமாக்களையும், அது கட்டமைக்கும் பிம்பத்தையும், வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த நூல். இதில், சாதி அடையாள சினிமாக்களையும், சாதியத்தை வேரறுக்கும், அதன் சுயபெருமையை பகடி செய்யும் படங்களையும் ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது, சாதி அடையாள சினிமா. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், தீ. கார்த்தி, இயல்வாகை, பக். 128, விலை 100ரூ. உணவை மருந்தாக சாபபிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல். உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டிய வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழக்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் […]

Read more