வாழ்வும் மொழியும்

வாழ்வும் மொழியும், ஜே.ஆர்.இலட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், விலை 200ரூ. ஜவ்வாது மலைவாழ்வின் ஆவணம், செஞ்சி நாயக்கர் வரலாறு, தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், ஆனைமலைக் காடர்கள், வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என வாழ்க்கைமுறை சார்ந்த கள ஆய்வுகளையும், இலக்கியங்கள் மற்றும் சமூக வரலாற்று நூல்களில் மேற்கொண்ட ஆய்வுகளையும் ஆவணப்படுத்திவருகிறார் ஜே.ஆர்.இலட்சுமி. இந்தப் புத்தகத்தில் ஜவ்வாது மலைவாழ் மலையாளப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நில அமைப்பு, அவர்களின் கலைப் பங்களிப்பு, மொழிநடை உள்ளிட்ட விஷயங்களை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு சொற்களையும் இங்குள்ளவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது […]

Read more

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், பக். 194, விலை 200ரூ. பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேளூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம் முதல், கோவிலூர் வரை, 32 கிராமங்களில் கள ஆய்வு செய்து, அங்கு நிலவும் வாழ்வு முறை, தொழில், பண்பாடு, திருமணம், உணவு முறை, பேச்சு மொழி போன்ற எல்லாத் தகவல்களையும் திரட்டி வழங்கியுள்ளார். அறிமுகம் துவங்கி, கள ஆய்வுக்கு உதவியவர்கள் வரை, […]

Read more

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more