எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?, பயிற்சிப் புத்தகம்-ரா.கி. ரங்கராஜன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 115ரூ. கதையினால் உலகத்தை வெல்லலாம். மனிதனைத் திருத்துவது, வழிகாட்டுவது, மேம்படுத்துவது, சிரிக்க வைப்பது, தியாகம் செய்ய வைப்பது, குடும்பத்துக்கும் தேசத்திற்கும் பணியாற்ற வைப்பது எல்லாமே கதைகள்தான். அந்தக் கதைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான் பயிற்சியின் மூலம் மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார். இவை முன்பு அஞ்சல்வழிக் கல்விபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்டாலும், இன்று அவை ஒருசேர, ஒரே […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூ லைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ஆம் முதன்மைச் சாலை, மாத்தூர், சென்னை 68, பக். 224, விலை 200ரூ. தாமஸ் கார்லைல் 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அறிஞர். இவரது எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை. இவரது சொற்பொழிவுகளை ஆங்கிலேயர்கள் காசு கொடுத்துக் கேட்டனர். அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் மீது மேற்கத்திய நாடுகளின் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கொண்டிருந்த வெறுப்புணர்வு அளவிட முடியாதது. அந்தளவுக்கு பிரசாரம் முடுக்கி விடப்பட்டிருந்தது. […]

Read more