எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மகாத்மா காந்தியின் பாதம் பதிந்த பூமி, நெல்சன் மய்டேலா பிறந்த மண் என்று பெருமைகள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா நோக்கில் சென்று, வரலாற்று நோக்கில் கண்டு, ஆவணமாகப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் எடுக்கும் புகைப்படங்களைப் போலவே அவரது எழுத்துகளும் மிளர்கின்றன. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ. பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார். நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். […]

Read more

தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள், கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. நட்பின் பெருமை பேசும் ஒரு பயண நூல் தென் ஆப்பிரிக்கப் பயண அனுபவங்கள் என்று தலைப்பிட்டிருந்தாலும் இந்த வித்தியாசமான நூலில் நீண்ட கலமாக நிலவிவருகிற நட்பின் பெருமையை நினைவு கூர்கிற பகுதிகள் அதிகம். 1970, 1990 ஆண்டுகளில் அறிமுகமான நண்பர்களை 2011, 12 ஆண்டுகளிலும் அதே பாசத்துடன் சந்திப்பது என்பது அதிகம் பேருக்குக் கிடைக்க முடியாத பேறு. அப்படிப்பட்ட அரிய வாய்ப்புகளைப் பெற்றதோடு அந்த நினைவுகளைப் படப்பதிவுகளாகவும் […]

Read more

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இரா. வெங்கடேசன், இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-012-8.html செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது. பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்ததமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் சி.வை. தாமோரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை. தமிழ்ப் பெரியோர்கள் அயராத […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more