திராவிட ஆட்சி 50

திராவிட ஆட்சி 50, லெனின், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.200 திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்பாக, 48 பேரின் கட்டுரைகள் தொகுப்பு. ஆட்சியாளர்களின் பலம், பலவீனங்கள் காணக் கிடைக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, ஆட்சிக் காலத்தை பகுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ‘ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க தொடங்கிய காலம் உதயமானது…’ என, எழுதியுள்ளார். கடந்த, 1967-ல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார்; தி.மு.க., 19 ஆண்டுகளும், அ.தி.மு.க., 31 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன. இரண்டையும் சம தட்டில் வைப்பதோ, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளை […]

Read more

லெனின்

லெனின், ஜீவபாரதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட லெனின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வரலாறு ஒரு தனி மனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது. லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜீவபாரதி. இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று […]

Read more

ஐந்திரன் படைப்புகள்

ஐந்திரன் படைப்புகள், லெனின், விஜி பதிப்பகம், டி5, 4சி, சிவ இளங்கோ சாலை, ஜவகர் நகர், சென்னை 82, விலை 100ரூ. கவிஞர் ஐந்திரன் (வெ. முத்துலிங்கம்) எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவிதைகள்தான் அதிகம். ரசிக்கத்தக்க விதத்தில் கவிதைகளை எழுதியுள்ளார் ஐந்திரன்.   —-   வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை, பசுமைக்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-6.html […]

Read more