நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்,  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்,திருப்புகழ்ச் சங்கமம்,  பக்.464,  விலை ரூ.396. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர். இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய […]

Read more

கும்பகோணத்தில் உலா

கும்பகோணத்தில் உலா, வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், யுனிவர்சல் பப்ளிஷிங், பக். 376,விலை 270ரூ. சோழ வளநாட்டின் சரித்திரத்தை குடந்தை நகருக்குச் சிறப்பான ஒரு பெரும் பங்குண்டு என்று கூறுவர். குடந்தையின் பெருமையை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் போன்றோர் போற்றிப் பாடியுள்ளனர். மகாமகக் குளத்தின் சிறப்பு, திருக்கோயில்களின் சிறப்பு போன்றவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளுடனும், தேவாரப் பாடல்களுடனும் புராணக் குறிப்புகளுடனும் தந்திருப்பது சிறப்பு. குடந்தை மட்டுமின்றி, குடந்தையைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருபுவனம், திரவிடைமருதூர் முதலிய ஊர்களில் உள்ள […]

Read more