தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.120. தினத்தந்தி அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக சொல்லும் நுால்; 27 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தொடருக்கு ஏற்ப, சி.பா.ஆதித்தனாரின் பத்திரிகை கொள்கையை அப்படியே பின்பற்றினார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். அத்தியாயங்களின் நிறைவில் சி.பா.ஆதித்தனாரின் படமும், அவரது பொன்மொழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பேசுவதில் மட்டும் அல்ல, எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர் வானொலி அண்ணா என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த நுால். நன்றி: தினமலர், […]

Read more

100 சிறுவர் கதைகள்

100 சிறுவர் கதைகள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.340 சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன. புகழ் பெற்ற வானொலி நிகழ்ச்சிகளை வழங்கிய வானொலி அண்ணா எழுதியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. முதல் கதையே, ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்து உள்ளது. அனைத்து கதைகளும் நேரடியாக கேட்பது போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன. மிகவும் எளிய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன. உழைப்பு, அறத்துடன் வாழ்தல் போன்றவற்றின் மேன்மையை பறை சாற்றுவதாக கதைகள் […]

Read more

நகைச்சுவை நாடகங்கள்

நகைச்சுவை நாடகங்கள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.325 நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம், 15 நாடகங்கள் உள்ளன; அனைத்தும், வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி புகழ்பெற்றவை; நேயர்களிடம் பாராட்டுகளை பெற்றவை. நுகர்வோர் சட்டங்களை மிக எளிமையாக புரிய வைக்கும் நுட்பத்துடன் எழுதப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் மருத்துவம், நுகர்வோர் உரிமை போன்ற பொருளடக்கங்களைக் கருவாகக் கொண்டுள்ளன. வாசிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏதுவாக உள்ளன. மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளன. சிறு சுலபமான உரையாடல்கள் மிகவும் நயமாக வும், […]

Read more

திரைக்கவித் திலகம் 100

திரைக்கவித் திலகம் 100, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், பரணி பதிப்பகம், விலைரூ.250 கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்… அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு […]

Read more