சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,
சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில், ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]
Read more