தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360.

சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார்.

இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, தற்காலப் புலவர்கள் குறித்து அவர்தம் படைப்புகள் குறித்தும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவதாகக் கூறப்படும் சீவகசிந்தாமணியைவிடவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் வைக்கப்படும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காலத்தால் முந்தியவை என்று பதிவு செய்கிறார்.

தமிழர்களின் கலைநூல்கள் குறித்து விவரிக்குமிடத்து, திருடுவது எப்படி என்று அறிவிக்கும் “கரவட நூல்’ குறித்தும், பூமிக்கடியில் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் “புதையல் நூல்’ குறித்தும், யானையின் வாழ்க்கை முறையை விளக்கும் “யானை நூல்’ குறித்தும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள செய்திகள் வியப்பளிக்கின்றன.

திருக்குறள் கருத்துகள், நற்றிணை, சிலப்பதிகாரம், மணிமேகலை, திவ்விய பிரபந்தம் போன்ற நூல்களில் விரவி வந்துள்ளதையும், சேக்கிழார், கம்பர் ஆகியோரும் திருக்குறளின் கருத்துகளைக் கையாண்டிருப்பதையும் ஆசிரியர் தரவுகளோடு நிறுவியிருக்கிறார்.

தமிழ்மொழி குறித்து ஆய்வு மேற்கொள்வோருக்கு மட்டுமல்ல, தமிழிலக்கியம் குறித்து எளிமையாக அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும் இந்நூல் ஒரு கருவூலம் எனலாம்.

நன்றி: தினமணி 15/11/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.