தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள், சு.தியடோர் பாஸ்கரன், தமிழில்: அ.மங்கை, அகநி வெளியீடு, விலை: ரூ.220

நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ ஆங்கில இதழில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், வெகுஜனப் பார்வையாளர்கள் மீது சினிமாவுக்கு உள்ள வீச்சு பற்றிய அவரது புரிதலைக் காட்டின.

நாடக நடிகர்கள், பாடகர்கள், நாராயணன் போன்ற பிரபல சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவை அரசியல்மயமாக்கத் தம்மளவில் முயன்றனர். அதோடு, அன்று நிலவிய அரசியல் சூழலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் பேசும்படம் தோன்றிய காலத்தில், சென்னையிலிருந்த அரசியல் சூழல் வலுவான தேசிய விடுதலை சார்ந்ததாக இருந்தது. வெகுஜன அடிப்படை கொண்ட சினிமா போன்ற எந்த நிகழ்கலையும் அதன் தாக்கத்திலிருந்து தப்பியிருக்க முடியாது. வரிகொடா இயக்கம், தேசிய விடுதலை இயக்கத்தை முதன்முறையாகப் பரவலாக்கியிருந்தது. அதன்மூலம் பல முனிசிபாலிடி மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகக் குழுக்களில் காங்கிரஸ் இடம்பெறத் தொடங்கியிருந்தது.

வரி கொடா இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் சென்னை ராஜதானியில் புதியதொரு விழிப்பை உருவாக்கியிருந்தன. அரசாங்கம் வெகுஜன தொடர்புச் சாதனங்கள் மீது பலத்த தணிக்கைகளை ஏவியிருந்தது. இயக்கம் முடிவுபெற்றதும், 1935 இந்திய அரசு சட்டம் தேர்தல்களைக் கொண்டுவந்தது. பின்னர், தணிக்கை விதிகள் சற்றுத் தளர்ந்த பின், அரசியல் களத்தோடு ஊடாட்டத்துக்கு சினிமா தயாராக இருந்தது. தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தித் தமது படங்களின் மூலம் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘தண்டோராக்காரர்கள்’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதி…

நன்றி: தமிழ் இந்து, 8-2-2020.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *