தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம்.

அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 203 திருத்தலங்களின் வரலாற்றை இதில் காணமுடிகிறது. அந்த வரலாறுகளைச் சொல்வதன்மூலம், இந்து மதத்தில் சைவம், வைணவம் என்ற வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதையும் ஆசிரியர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நன்றி: தினத்தந்தி, 22/3/2017.

Leave a Reply

Your email address will not be published.