திருப்பல்லாண்டு வ்யாக்யானம்

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ‘திருப்பல்லாண்டு வ்யாக்யானம்‘, தொகுப்பாசிரியர் அ. கிருஷ்ணமாச்சார்யர், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 155.

நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு பெரியவாச் சான்பிள்ளை வியாக்யானம் அருளிச் செய்துள்ளார். அதில் உள்ள திருப்பல்லாண்டுக்கான வ்யாக்யானம் மட்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என்று, முதல்பாட்டு தொடங்குகிறது. இப்பாடலுக்கு பதவுரை, அவதாரிகை, வ்யாக்யானம் என ஒவ்வொன்றும் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. உச்சரிக்கும் சொல்லுக்குள்ள அர்த்தபேதங்களையும் (பொருள் வேறுபாடு) தனியாக எடுத்துரைக்கின்றார். இப்படியாக பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்… என ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதால் படிப்பவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாறு 12 பாடல்களுக்கும் மேற்கண்டவாறு பொருளுரைக்கப்பட்டுள்ளதால் இந்நூல், படிக்க எளிதாகவும், இனிமையாகவும் அமைந்துள்ளது. அடுத்ததாக, ‘திருப்பல்லாண்டு வ்யாக்யான ப்ராமாணத் திரட்டு’ என்ற தலைப்பில் அளிக்கப்பட்டிருக்கும் 90 சமஸ்கிருத பாடல் வரிகளைக் கொடுத்து, அதற்கான பொருளையும் எளிய தமிழில் விளக்கியிருப்பது அருமை!

பின்னிணைப்பாக அமைந்துள்ள ‘திவ்யப்பிரபந்த அருஞ்சொல் அகராதி’யில் உள்ள வடமொழி சொற்களுக்கு எளிதான தமிழ் வார்த்தைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மற்றும் தமிழ்பற்று உள்ளவர்களுக்கு ஓர் அருள் பிரசாதம்!

நன்றி: தினமணி, 21/3/201

Leave a Reply

Your email address will not be published.