துவந்துவ யுத்தம்

துவந்துவ யுத்தம், தி.குலசேகர், தாமரை பிரதர்ஸ் லிமிடெட், பக்.96, விலை 20ரூ.

பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

குழந்தைகளுக்கான காமிக்ஸ், கார்ட்டூன் படக்கதைகள் முதல், அனைத்து தரப்பினரும் வாசிக்கும் கிரைம் நாவல்கள் என ரயில், பஸ் நிலையங்களில் முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும். இப்போது அது குறைகிறது என்ற குறையை சரி செய்ய வந்துள்ளது, ‘துவந்துவ யுத்தம்’ புத்தகம்.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் திரைத்துறையில் நுழைந்த தி.குலசேகர் விறுவிறு நடையில் இதை எழுதிஉள்ளார்.
வெறும் கதையாக மட்டும் இதை எடுத்துக் கொள்ள முடியாது.

‘ஈகோ’ என்னும் தன்னுணர்ச்சி பிரச்னையால், உயிர் கூட போய்விடும் என்ற அருமையான கருத்தையும் இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு டிரக், ஒரு கார், ஒரு நெடுஞ்சாலை… இவை தான் கதையின் நாயகர்கள். இவர்களுடன் சேர்ந்து பயணிக்க, இருபதே ரூபாய் போதும். விறுவிறுப்பான நாவல்.

–பரணிபாலன்.

நன்றி: தினமலர், 2/7/2017.

Leave a Reply

Your email address will not be published.