விந்தன் கதைகள்

விந்தன் கதைகள், தொகுப்பும் பதிப்பும் சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 1121; ரூ.1,100.

அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகத் திறமையாளராக தன்னை வெளிப்படுத்தியவர் விந்தன். 1939 முதல் சுமார் 25 வருடங்கள்அன்றைய பல்வேறு முன்னணி இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகள், குட்டிக்கதைகள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்நூல்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படைப் பிரச்னைகள் மிகவும் துல்லியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. “வாழப் பிறந்தவன்’ எனும் சிறுகதை வறுமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் சமூகத்தின் அடித்தட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளதைச் சித்திரிக்கிறது.

“புதிய புராணம்’ எனும் குட்டிக்கதை, ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களை சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது என்கிறது.

புராண கதாபாத்திரமான விக்ரமாதித்தனை நவீன உலகில் உலவவிட்டு, நாகரிக உலகின் அபத்தங்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளார், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகளில். சமகால இலக்கிய ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நூல்.

நன்றி: தினமணி, 16/8/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031548_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.