அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ.

மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி சிரித்துக்கொண்டே ‘அது எனக்கு ஏற்கனவே தெரியும்’ என்று சொன்னாராம். அது உண்மைதான். இந்திராவுக்கு அது தெரிந்துதான் இருக்க வேண்டும். ‘சீக்கியர்களை பாதுகாவலராக வைத்துக் கொள்ளாதீர்கள். அது உங்கள் உயிருக்கு ஆபத்து” என்று உளவுத்துறையினர் கடுமையாக எச்சரிக்கை செய்தும், அதைப்பற்றி கவலை இல்லை என்று சொனன்வர் இந்திரா…” இப்படி புதிய தகவல்களைத் தெரிவிக்கும் பதில்களும் பல உள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *