ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ.

பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் மிக நெருங்கிப் பழகியவரும், ஆதித்தனாரின் மாணவருமான அ.மா.சாமி, அரும்பாடுபட்டு ஆதித்தனார் வாழ்க்கையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து தந்துள்ளார். ஏராளமான படங்கள். அவற்றில் பெரும்பாலானவை இதற்கு முன் கண்டிராத அபூர்வமான படங்கள். கல்லுரியில் இதழியல் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.  

—-

உள்ளங்கையில் உலகம், ஜி.எஸ்.எஸ். வெளியீடு, கல்கி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

நாடாளுமன்ற தேர்தல் 2014, உருவானது தெலுங்கானா, 2014ல் நோபல் பரிசு பெற்றவர்கள், ஆசிய விளையாட்டுகள், பொது பட்ஜெட் இப்படி பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ். வரை பல பொதுப்பரீட்சைகளை எழுதுவோருக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகம். ஆனால் எல்லோருக்கும் பயனளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/1/2015,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *