உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே.

ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்)

ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு இருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார். To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-310-9.html அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட் என்று ‘உடையும் இந்தியா?’ சொல்லவில்லை. மாறாக, ஒருவேளை அவரை அறியாமலேயே அமெரிக்க உளவுத்துறையின் செயல்பாடுகளில் அவர் மீது ஒரு மையக் கண் விழுந்திருக்கலாம் என்று டி.என். சேஷன் சொன்னதையே சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும், ஆர். கண்ணன் எழுதிய நூலை சுட்டிக்காட்டி, அண்ணாதுரையின் பிரிவினைவாதம் வெறும் அரசியல் நாடகமே அன்றி அவர் இதயத்தில் தேச ஒருமைப்பாட்டில் உறுதி உடையவர் என்றும் கூறியுள்ளது (பக்கங்கள் 224 -5). லாயிடு ருடால்ப், ‘Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras’ என்ற நூலில் (பக்கங்கள் 413-417), ஈவெரா பிராமணர்களைக் கொல்லவேண்டுமென்றும், அக்ரஹாரங்களை எரிக்கவேண்டுமென்றும் அழைப்பு விடுத்ததை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார். ஈவெராவும், திராவிடர் கழகமும் இந்து கடவுள்களின் சிலைகளையும், காந்தி சிலைகளையும் உடைத்த வன்முறை நிகழ்ச்சிகளையும் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். ஜேகப் பாண்டியன் என்ற எழுத்தாளரும், ‘Caste, Nationalism, and Ethnicity: An Interpretation of Tamil Cultural History and Social Order’ என்ற நூலில் (பக்கம் 63), திராவிட கலாசாரம் சீரழிய பிராமணர்களே காரணமென்றும், அதனால் அர்ச்சகர்களையும், வடமொழி நூல்களையும் அழிப்பதோடல்லாமல், பிராமண சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர்களை தமிழ்நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென்றும் ஈவெரா சொன்னதை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத்தானே ‘உடையும் இந்தியா?’ பக்கங்கள் 270-1-ல் ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறது? இந்தியாவில் திராவிட இனம், ஆரிய இனம் என்று இரண்டு இனங்கள் இருக்கின்றன என்ற கற்பனைவாதத்தை முதலில் இட்டவர் கால்டுவெல் என்ற கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர். அவருடைய நோக்கம் தமிழர்களை ஆரியர், திராவிடர் என்று பிரித்து வெறுப்பைத் தூண்டுவதுதான். ஸ்டீபன் ஒப்பன்ஹைமர் என்ற உலகப் புகழ் பெற்ற மரபியல் விஞ்ஞானி, ‘The Real Eve: Modern Man’s Journey out of Africa’ என்ற நூலில் இந்தியர்களை மரபணுரீதியாக திராவிடர், ஆரியர் என்றெல்லாம் பிரிக்க ஆதாரமே இல்லை என்று நிறுவியிருக்கிறார். இதைத்தான் ‘உடையும் இந்தியா?’ சுட்டிக்காட்டி இருக்கிறது. ‘உடையும் இந்தியா?’வில் ஆதாரக் குறிப்புகள் மட்டுமே 1486. அப்படியிருக்க, இதை ரமணன் ஆதார சான்றுகள் இல்லாத நூல் என்று சொன்னது விந்தை. ‘கல்கி’ வழி வந்த பத்திரிகையில் நிதர்சனமான உண்மை மட்டுமே இடம்பெற வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த விமர்சனத்தை எழுதினேன். – கலவை வெங்கட் நன்றி: கல்கி 13-01-13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *