உயிரே உனக்காக

உயிரே உனக்காக, ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 250.

சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன் சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர். நாவல்களும், சிறுகதைகளும் எழுதி புகழ்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களில் ஒன்று உயிரே உனக்காக. ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பின்னணியில் கதையை பின்னியிருக்கும் நடராஜன், வர்ணனைகள் மூலம் அந்த நகருக்கே நம்மை அழைத்துப் போகிறார். நரேன், மதுரிமா, கவிதை, வைதீஸ்வரன் என்ற நான்கு கதாபாத்திரங்களை வைத்து, கதையை விறுவிறுப்புடன் கொண்டு செல்கிறார். காட்சிகள், திரைப்படம்போல் நம் கண்முன் ஓடுகின்றன. படிப்பதற்கு மட்டும் அல்ல, திரைப்படமாக எடுப்பதற்கும் ஏற்ற கதை.  

—-

 

கிரகங்கள் சொல்லும் ஜோதிட இரகசியம், தாரை என். நாராயணராவ், எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவாட்டர்ஸ் ரோடு, தி. நகர், சென்னை 17, விலை 108ரூ.

கிரகப்பலன்கள் பற்றி மட்டும் அல்லாது ஆரூடம், எண் கணிதம், பெயரியல், வாஸ்து என அனைத்து ஜோதிட குறிப்புகள் பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளன.  

—-

 

தேரோட்டம், மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், 96, யூனியன் கார்பைடு காலனி, 3வது தெரு, கொடுங்கையூர், சென்னை 118, விலை 100ரூ.

பொதுவாக, சிறுகதைத்தொகுதி என்பது ஒரே ஆசிரியர் எழுதிய பல கதைகள் அடங்கியதாக இருக்கும். தேரோட்டம் என்ற சிறுகதைத் தொகுதியில் 30 இளம் எழுத்தாளர்கள் எழுதிய 30 சிறுகதைகள் அடங்கியுள்ளன. மாறுபட்ட சிந்தனையாளர்களின் சங்கமம் ஆக, இந்தத் தொகுதி விளங்குகிறது. ஆரோக்கியமான புதிய முயற்சி. நன்றி: தினத்தந்தி, 8/2/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *