கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-8.html

திருமணம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்வது, வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்வது, பல பெண்களைத் திருமணம் செய்வது இப்படி பலவிதமான வழக்குகள் கோர்ட்டுக்ளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவகளின் கீழ் வருகிறது, அதற்கு என்ன தண்டனை என்பதையும் கதையுடன் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். சட்டப்பிரச்னைகளை புரியும்படி வெளிப்படுத்துவதிலும், கதைகளை எழுதுவதிலும் சுமதி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே அவருக்கு இரண்டு சபாஷ்.  

—-

 

என்னுயிர் இந்திய ராணுவத்திற்கே, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர்,சென்னை 17, விலை 55ரூ.

அர்ஜுன் என்ற இந்து வாலிபருக்கும் ஆஷா என்ற முஸ்லிம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு தேச பக்தியைத் தூண்டவேண்டும் என்ற நோக்கத்துடன் எஸ். சக்தி கதிரேசன் இந்த நாவலைப் படைத்துள்ளார். எளிய நடையில் நாவல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.  

—-

 

தையற்கலை வழிகாட்டி, ஆர். ஜெயந்தி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 60ரூ.

தையல் கற்றுக் கொள்ள வேண்டும். ரெடிமேடு ஆடைகள் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு ஒரு வழிகாட்டி இந்த நூல். பெண்களுக்கு மிகவும் உதவக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 5/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *