கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ.

ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.  

—-

குறையொன்றுமில்லை, கவிஞர் ஏகலைவன், வாசகன் பதிப்பகம், சேலம், பக். 120, விலை 60ரூ.

இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டும் வகையில் உள்ளது நூலாசிரியரின் வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு. வாழ்க்கைப் பாடத்தில் உள்ள நல்ல செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் பண்படுத்தும் முயற்சி இது. இந்த சிந்தனைகளை சின்னஞ்சிறு கதைகள், அறிஞர்களின் வாழ்வு, மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளோடு சுவைபடச் சொல்லியதோடு நிறுத்தாமல் வாழ்க்கையைப் பற்றிய தேடலையும் முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: குமுதம், 30/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *