கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html

தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய கோணத்தில் காட்டும் நூலாசிரியர், சில வினாக்களையும் முன்வைக்கிறார். பாரதி வாழ்ந்த காலத்தில் ஏன் அவர் போற்றப்படவில்லை? சங்க இலக்கியங்களைத் தேடிப் புறப்பட்ட உ.வே.சாவுக்கு உள்ளூர் பக்கத்தில் இருந்த பாரதியைப் போற்ற மனமில்லை ஏன்? தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளுக்கு பாரதி ஓர் கவிஞனாகவே தென்படவில்லையே ஏன்? இதற்கு அவரே அருமையான விடையும் கூறியுள்ளார். காந்தியை பாரதி சந்தித்த காட்சியை வ.ரா. வாக்கினில் கூறி, பாரதியை மதிக்காத சூழலை, படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். – முனைவர் மா. கி. ரமணன்.  

—-

 

பொன்னியின் செல்வன், கல்கி, குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், சென்னை 17, ஐந்து பாகங்களை உடையது. விலை மக்கள் பதிப்பு ரூ. தலா 60, 65, 55, 55 மற்றும் 100.

அமரர் கல்கி எழுதிய காலங்களை கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நவீனம், தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது நூல்களை பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு வடிவங்களில் வெளியிட்டள்ளன. இதைப் பின்பற்றி குமரன் பதிப்பகமும் ஐந்து பாகங்களாக, இந்த புதினத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை யாரும் வெளியிடாத கைக்கு அடக்கமான கிரவுன் கட்டமைப்பில், பரிசுப் பதிப்பாகவும், மக்கள் பதிப்பாகவும் (குறைந்த விலை) இரண்டு விலைகளில் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், வாசிக்கும் ஆர்வம் உடைய ஒவ்வொருவரின் வீடுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக விளங்குவது, பொன்னியின் செல்வன் நூல். நன்றி: தினமலர், 05 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published.