சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு, கவிதா பதிப்பகம், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-4.html ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது விசேஷமானது. இது சார்லி சாப்ளினே எழுதிய சுயசரிதை. ஒரு நாவலைப் படிப்பது போன்ற சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. மூலத்தின் சுவை குறையாமல் அழகாகத் தமிழாக்கம் செய்துள்ள சிவன் பாராட்டுக்கு உரியவர்.  

கண்ட நாள் முதலாய், கார்த்திகேயன், ஆர்.ஐ.பப்ளிகேஷன், 69, நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை 10, விலை 75ரூ.

பலதரப்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார் கார்த்திகேயன். பட்டப்படிப்பை முடித்த 21 வயது இளைஞர். அனுபவமற்ற சில இளம் கவிஞர்களின் கவிதைகள், காயாக கசக்கும். இவருடைய கவிதைகள் பழமாக இனிக்கின்றன. எதிர்காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர் இவர் என்பதற்கு இந்தப் புத்தகமே சாட்சி. நன்றி – தினத்தந்தி, 6 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *