சிந்தனைச் சுரங்கம்

சிந்தனைச் சுரங்கம் (முதல் பாகம்), கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், பக். 432, விலை 425ரூ.

தமிழக முன்னாள் தலைமை செயலர் அமரர் கா. திரவியம் இ.ஆ.ப. நான்கு தொகுதிகளாக எழுதி வெளிவந்த சிந்தனை சுரங்கம் என்ற நூலின் முதல் பாகம் மட்டும், தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது. மேலைநாட்டு, இந்திய நாட்டு அறிஞர்கள், தமிழ் இலக்கியங்கள், பழமொழிகள் என, சிந்தனைகளின் அகர வரிசைத் தொகுப்பு, பொருளகராதியுடன் வெளிவந்துள்ளது. சிறப்பான சிந்தனைகளின் தொகுப்பு. எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளது, ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு. ஒரு பொருள் தொடர்பான சிந்தனைகளை, தமிழ் இலக்கியம், பழமொழிகளில் இருந்து தொகுத்து, அதற்கு இணையாக உலக அறிஞர்களின் சிந்தனைகளையும் இணைத்து கொடுத்துள்ள ஆசிரியரின் புலமை அளப்பரியது. சிறந்த கெட்டி அட்டைக் கட்டுமானத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அரிய நூல், அனைவரின் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும். நான்கு தொகுதிகளும் ஒருசேர வெளிவந்திருந்தால் இன்னும், சிறப்பாக இருந்திருக்கும். -ந. ஆவுடையப்பன். நன்றி: தினமலர், 26/4/2015.  

—-

பாரதியும் தேசியத் தலைவர்களும், புலவர் சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 65ரூ.

பாரதியாருடன் 17 தேசிய தலைவர்களை ஒப்பிட்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பாரதி குறித்த சித்திரத்துக்கு வண்ணம் சேர்க்கும் நூல்களில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.

Leave a Reply

Your email address will not be published.