சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல்

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல், முனைவர் கா. அய்யப்பன், இராசகுணா பதிப்பகம், பக். 138, விலை 120ரூ.

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை, ஐந்து பிரிவுகளில், ஆய்வு செய்கிறது இந்த நூல். முதல் பிரிவில் மணிமேகலை காப்பியக் கதையும், இரண்டாம் பிரிவில் இந்திர விழாவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரிவில், மணிமேகலை கூறும் தத்துவக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், மணிமேகலை காப்பியத்தைப் பிற பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஐந்தாம் பிரிவில், உரையாசிரியர்கள், மணிமேகலை காப்பியத்தைப் பயன்படுத்தியுள்ள தன்மையைக் காட்டியுள்ளார். முதலும் முடிவுமாக ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட காப்பியம் மணிமேகலை. இந்தக் காப்பியம் பிற காப்பியங்கள் அளவிற்கு அனைவராலும் கற்கப்படவில்லை. அவ்வாறு கற்கப்படாமைக்கான காரணங்களைச் சுட்டுகிறது இந்த நூல். வேனில் விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்திர விழா, 27 நாள் நடக்கும் என்றும், 28ம் நாள் கடற்கரையில் நடக்கும் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார் நூலாசிரியர். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 30/8/2015.

Leave a Reply

Your email address will not be published.